14581386_309772676071610_5783624492030276201_nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மாங்குளம் நகரத்தை அண்டிய 11 கிராமங்களில் மக்கள் மீள்குடியேறி 7 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பொதுநூலக வசதியோ அல்லது பொதுநோக்கு மண்டபங்களில் தினசரி பத்திரிகைகள் வாசிப்பதற்குரிய வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையால் தமக்குரிய அறிவுத்தேடல்களை பெறமுடியாதுள்ளதாக பாடசாலை மாணவர்கள் பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளில் சுமார் 2 ஆயிரத்;து 500 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் அநேகமான பாடசாலைகளில் நூலக வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

நூலக வசதி ஏற்படுத்தப்படாத பாடசாலை மாணவர்கள் தமது கற்;றலுக்குரிய அறிவுத்தேடல்களை பொதுநூலக வசதிகளைப் பயன்படுத்பெறமுடியாத அவலநிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதே போல்மாங்குளம் நகரத்தை அண்டிய பகுதிகளில் உள்ள 11 கிராமங்களில் சுமார் 2. ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.
இக்கிராமங்களிலும் பொது மக்கள் தினசரி பத்திரிகைகளை கூட வாசிக்க முடியாத அவல நிலைகாணப்படுகின்றது.

இடப்பெயர்வின் பின் மக்கள் மீள்குடியேறியபோது மாங்குளம் நகரத்தில் 2 மாடிகளைக் கொண்ட நவீன வசதிகளை உள்ளடக்கியதாக பொதுநூலகம் ஒன்று அமைத்து தரப்படும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் கடந்த 2011ம் ஆண்டிலிருந்துவாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றபோதும் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது.

எனவே புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் இதனை கவனத்திலெடுத்து நவீன வசதிகளைக் கொண்ட பொது நூலகம் ஒன்றை மாங்குளம் நகர பகுதியில் அமைத்து தர வேண்டும் எனவும் கிராமங்கள் தோறும் குறைந்தது பொதுநோக்கு மண்டபங்களில் தினசரி பத்ரிகைகளை பார்வையிடுவதற்குரிய வசதிகளையாவது ஏற்படுத்தித்தரவேண்டும் என பாதிக்கப்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் கோரிக்;கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment