முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மக்களில் சிலர், தமக்கு இதுவரை வாழ்வாதார உதவிகள் கிடைக்கவில்லையெனத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (18) காலை 9.30 மணிக்கு,  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கூடிய மக்கள், வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் போது  ஒருசிலருக்கே தொடர்ச்சியாக வழங்கப்படுவதாகவும் இதனால், தாம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக , வெளிநாட்டிலிருந்து வருகின்ற நிதிகளைப் பகிர்ந்தளிக்கும்  அமைப்புக்கள் பல, தமது விரப்புக்கேற்றவாறு வாழ்வாதாரத்தை வழங்குவதாகவும் இதனால் தாம் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற ஒரு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.article_1479459349-DSC09145 article_1479459357-DSC09150 article_1479459366-DSC09168

Comments

comments, Login your facebook to comment