v0189வவுனியா மகாறம்பைகுளத்தில் நேற்றைய தினம் 17.11.2016 இரவு 8மணியளவில் நடத்தபட்ட வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தனது வீட்டில் இருந்து  தேவைக்காக கடைக்குச் சென்று திரும்பிய நபரான சுப்பையா தயாகரன்(27) என்பவர் மீதே வாள் வீச்சு இடம்பெற்றுள்ளது .இவ் வாள் வீச்சில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவ் வாள்வெட்டு சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments

comments, Login your facebook to comment