625.500.560.350.160.300.053.800.900.160.90அமெரிக்காவின் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2014-2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.9 வீதமாக உயர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் 3080 இலங்கை மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர் என்று ஓப்பன் டோர்ஸ் என்ற புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சர்வதேச கல்வியை பொறுத்தவரையில் மாணவர்களின் திறமைகளையும் உலக பொருளாதாரத்தையும் புதிய வலைமைப்பையும் ஊக்குவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்காவின் உதவித்தலைவர் ரொபட் ஹில்டன் தெரிவித்துள்ளார்

இதேவேளை, அமெரிக்க தூதரகமும் இலங்கையின் புல்பிரைட் ஆணைக்குழுவும் இணைந்து இன்று பிற்பகல் 2 மணிமுதல் 5மணிவரை, கொழும்பில் இலவச கல்வி சந்தை ஒன்றை நடத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment