imagesபொரலஸ்கமுவ – பெப்பிலியான பிரதேசத்திலுள்ள புடவையகம் ஒன்றின் களஞ்சியசாலையில் இன்று(19) தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு கொழும்பு, தெஹிவளை மற்றும் கோட்டை தீயணைப்புப் பிரிவினர் முயன்று வருவதோடு மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெஹிவளையில் பெஷன் பக் ஆடைக்களஞ்சியம் தீக்கிரை

தெஹிவளை பிரதேசத்தில் அமைந்திருந்த பெஷன்பக் ஆடைக்களஞ்சியத்தின் பிரமாண்ட காட்சியறையொன்று நள்ளிரவு தீக்கிரையாகியுள்ளது.

தெஹிவளை பெப்பிலியான பிரதேசத்தில் நேற்று நள்ளிரவை அண்மித்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இப்பிரதேசத்தில் அமைந்திருந்த பெஷன் பக் ஆடைக் களஞ்சியத்தின் முதன்மை அலுவலகம் மற்றும் பிரமாண்ட காட்சியறை என்பனவே தீக்கிரையாகியுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் தீவிபத்தின் காரணமாக பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஹிவளை கல்கிஸ்ஸை நகர சபையின் தீயணைப்பு வண்டிகளும் உரிய நேரத்தில் வரத் தவறியதன் காரணமாக தீ விபத்தின் சேதம் அதிகரித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment