முல்லைத்தீவு பிரதான வீதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மூன்று பேர் அடங்கிய குழுக்களாக பிரிந்து சென்று பிரதான வீதிகளில் உள்ள பாலங்கள், மரங்கள், பற்றைகள், புற்செடிகள் போன்ற மறைவான இடங்களை சோதனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பொது இடங்களில் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதினால் குறித்த சோதனை இடம்பெறுவதாக கருதப்படுகின்றது.

எனினும் யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் விடுதலைப் புலிகளின் கடந்தகால தாக்குதல்கள் தொடர்பாக இராணுவத்தினர் இன்னும் அச்ச நிலையில் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.FotorCreated-223

Comments

comments, Login your facebook to comment