வவுனியா – புளியங்குளத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மூவர் இன்று(20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்றைய தினம் ஆறு பேர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது, புளியங்குளம் பழையவாடி காட்டில் வெட்டப்பட்டு ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த 100,000 பெறுமதியான ஐந்து முதிரை மரக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment