DSC_0943இலங்கை பூராவும் சிறு நீரக நோய்க்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களை ஏற்படுத்துவது தொடர்பான திட்டத்திற்கு அமைவாக வவுனியாவில் 24 வது சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் நிலையம் இன்று வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குடிநீர் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையுடன் கூடிய விளக்கமளிக்கும் விளம்பரப்பலகை முற்று முழுதாக சிங்களத்தில் வைக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் அதே தினத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறு நீரக நோய் தொடர்பான பிரச்சனைகளை தீரத்து வைக்கும் முகமாக திறந்து வைக்கப்பட்ட வன்னிக்கான ஜனாதிபதி இணைப்பு செயலகத்தின் பெயர்ப்பலகையானது முற்று முழுதாக சிங்கள மொழியிலேயே எழுதப்பட்டுள்ளதுடன் மக்கள் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என தெரியாமல் அங்கலாய்த்ததை காணக்கூடியதாக இருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து நல்லாட்சி குறித்தும் பேசிவரும் நிலையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியாவில் தனிச்சிங்களத்தில் பெயர்ப்பலகை அமைந்துள்ளதால் தமிழ் மக்களுக்கு அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என தெரியாத நிலையில் பயன்பெற முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இரண்டு மொழிகளிலும் பெயர்ப்பலகை வைக்கும்போது மக்கள் இலகுவாக பயன்பெற முடியும் என்பதுடன் பயமில்லாமல் அதிகாரிகளை அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என  குறிப்பிட்டனர்.

DSC_0846DSC_0943 DSC_0847 DSC_0946

Comments

comments, Login your facebook to comment