download (2)சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மணலாற்று பகுதியிலுள்ள விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கும் என விஜயம் செய்த போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வடக்கிலுள்ள சிங்கள மக்களான நீங்கள், சிறுபான்மையினராக இன்று மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை, வடக்கு கிழக்கு முழுவதையும் வேறுபடுத்து தமிழர்களின் இரதானியாக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டுவருவது தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. கூட்டு எதிர்கட்சி என்ற வகையில் கொள்கை ரீதியில் சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டுவருவதை முழுமையாக எதிர்கிறோம் என நாம் தெளிவாக கூறியுள்ளோம்.

30 வருட யுத்தத்தின் பின்னர் ஒன்றிணைத்த நாட்டை மீண்டும் துண்டு துண்டாக பிளவுபடுத்தும் செயற்பாடே இதன் ஊடாக இடம்பெறும். இதற்கு எங்களால் இடம்கொடுக்க முடியாது. ஆகவே அதற்காக எமது பலத்தை கொண்டு நடவடிக்கை எடுப்போம்.

அவர்கள் அனைத்து அதிகாரங்களையும் கேட்கின்றனர். பகிரப்பட்ட  அதிகாரம், பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் கேட்கின்றனர். இதுவொரு சிறிய நாடு, அவ்வாறு பிரிப்பதற்கு முடியாது.அமெரிக்கா போன்று இந்தியா போன்று மிகப் பெரிய நாடு அல்ல.

ஸ்ரீலங்கா அவர்களின் நாடு என இந்தியாவிலுள்ள சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.அதனால் வேண்டியவாறு பிளவுபடுத்தி, பிரிக்க முடியும் என அவர்கள் நினைக்கின்றார்கள்.downloaddownload (2) download (1)

Comments

comments, Login your facebook to comment