625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)முறையற்ற வகையில் போலியான கல்விச் சான்றிதழ்களை முன்வைத்து அரச சேவையில் ஈடுபட்டு வந்துள்ள பெண் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கடந்த 24 ஆண்டுகளாக அரச சேவையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் பண்டாரவளை பிரதேசத்தினை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்டவர் ஊவா மாகாணத்தின் துணை தலைமைச் செயலகத்தில் தொழில்நுட்ப சேவையாளராக பணி புரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பெண்ணின் சேவையை நிரந்தர சேவையாக மாற்றுவதற்கு போலியான கல்வி சான்றிதழ்களை சமர்பித்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment