வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

போரின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த எவரேனும் ஒன்று கூடினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நினைவுகளில் ஈடுபட தமக்கு உரிமையுண்டு என அண்மையில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் குறித்து கொழும்பு வானொலியொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Comments

comments, Login your facebook to comment