625.500.560.350.160.300.053.800.900.160.90முல்லைத்தீவு மாவட்டம் 27 கிராம அலுவலர் பிரிவுகளையும் 114 கிராமங்களையும் கொண்டு காணப்படுகின்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குறித்த இடத்தில் 45 சிறிய விவசாயக் குளங்கள் ஏற்கனவே பாதிப்படைந்த நிலையில் இன்னும் புனரமைக்கப்படவில்லை.

இதனால் தொடரும் காலபோக மழை கிராமங்களை ஊடறுத்து ஆறுகளில் சங்கமிக்கின்றதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த குளங்களை புனரமைத்துக் கொள்வதன் மூலம் இவ்வாறான நிலையினைத் தடுக்க முடியும்.

அத்துடன் இதன் கீழ் உள்ள பயிர்ச் செய்கை நிலங்களில் விவசாயத்தினையும் மேற்கொள்ள முடியும். இதனால் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியும் எனவும் பிரதேச மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஓட்டுசுட்டான் பிரதேச மக்கள் தற்பொழுது மழை நீரை நம்பி காலபோக பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், குளங்களில் தண்ணீரை தேக்க முடியாமையினால் தொடரும் மழையினால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.

இதனால் பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment