625.0.560.320.160.600.053.800.668.160.90 (9)இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வன்முறை மூலம் எதிர்ப்பதையும் தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்டு புரட்சிகரமாக போராடுவதற்கு அன்றைய இளைஞர்கள் ஒன்று கூடினார்கள்.

இவர்கள் முதலில் புதிய தமிழ்ப் புலிகள் என்னும் பெயரில் இயங்கினார்கள். அக்காலத்தில் இவர்களிடம் ஆயுதம் எதுவும் இருக்கவில்லை.

முதலில் குறித்த அமைப்பில் இருந்த செல்லக்கிளி அம்மான் என்று அழைக்கப்படும் சதாசிவம் செல்வநாயகம் என்பவர் பயன் தரும் தனது சொந்த பசு மாடு ஒன்றை விற்பனை செய்து பிஸ்ரல் கைத்துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்தார்.

அதன்பின் குறித்த அமைப்பு S.M.G (sap mechine gun) ரக ஆயுதங்களுடன் வளர்ச்சியடைந்து, இயங்க ஆரம்பித்தனர். பின்னர் 1976 மே 5 ஆம் நாள் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் என் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

புரட்சிகர இயக்கமாக வளர்ச்சியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 ஆம் ஆண்டளவில் அதி நவீன ஆயுதங்களுடன் இலங்கை முப்படையினருடனும் களமாடியுள்ளனர்.

இந்த நிலையில் 2009ம் ஆண்டு மே மாதம் (18) விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் ஆயுதங்கள் மௌனவிக்கின்றது என்று அறிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் பல்வேறு வகையான ஆயுதங்கள் அப்போது இருந்தகாலத்தில் அவர்களின் தேசிய ஆயுதமாக AK 47 T56 ஆயுதத்தை தெரிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் மௌனித்த ஆயுதத்தடயங்கள் குறிப்பாக விடுதலைப் புலிகளின் AK T56 தேசிய ஆயுதத் தடயங்கள் தற்பொழுதும் ஆங்கங்கே காண முடிகின்றது.

குறித்த அமைப்பில் இணைந்து பேராடிய விடுதலைப் புலி உறுப்பினர்களில் சுமார் 45000 பேர்வரை வீரமரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment