625.472.560.320.505.600.053.800.900.160.100கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் உடல் இரண்டாக துண்டாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனி வீதியை சேரந்த 19 வயதான ஆர்.ஆகாஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் இன்று காலை பம்பலப்பிட்டி பகுதிக்கு வேலைக்கு சென்ற நிலையில், உயிரிழந்துள்ளதாக இளைஞரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த இளைஞர் ரயில் மிதி பலகையில் நின்றபடி சென்றுள்ளதாகவும், இதன் போது நிலை தடுமாறி கீழே விழுந்த போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது போன்ற துயரமான சம்பவம் வேறு எவருக்கும் ஏற்படக் கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment