hiv2016 ஆம் ஆண்டு  ஜனவரி முதல் கடந்த 10 மாதக்காலப்பகுதியில்  2436 பேர்  எயிட்ஸ் நோயிற்கு ஆளாகியுள்ளனர் எனினும், 2025 ஆம் ஆண்டளவில் நாட்டில்   எயிட்ஸ் நோயை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2030 ஆண்டளவில் சர்வதேச அளவில் இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளது என்று எயிட்ஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாகடர் ஜீ.வீரசிங்க தெரிவித்தார்.

எயிட்ஸ் நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறனை வலுவற்றதாக்கும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து மனிதனை முற்றுழுழுதான பாதிப்பிற்குட்படுத்தும் ஒரு அபாய நோயாகும்.

29  ஆவது உலக எயிட்ஸ் தினம் டிசெம்பர் முதலாம் திகதி அனுஷ்ட்டிக்கப்படவுள்ள நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருளாக எயிட்ஸை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்பனவாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி சர்வதேச எயிட்ஸ் தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு தெளிவுபடுத்தும் ஊடவியலாளர் சந்திப்பு இன்று குடும்ப சுகதார பணியத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

2016  இல் மாத்திரம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2,436  பேர் நாட்டில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டள்ளனர். அத்துடன் இவ்வாண்டு 2 சிறுவர்கள் இனங்காணப்பட்டமையும் எடுத்துக்காட்டத்தக்கது.

இதற்கிணங்க எயிட்ஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 2017 ஆம் ஆண்டு கர்ப்பிணி தாய்மார்களிலிருந்து குழந்தைக்கு இந்நோய் கடத்தப்படுவதை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்கும் இலக்கினை நோக்கிய பணிகள் துரிக கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு கர்ப்பிணிகளுக்ககான விசேட இரத்த பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு  இன்று நாடு முழுவதுமாக முன்னெடுப்பட்டு வருகின்றது.

எச்.ஐ.வி. எயிட்சுக்கான சிகிச்சை, நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாயிருந்தாலும் தற்சமயம் இந்நோய்க்கு தடுப்பூசியோ நிரந்தர தீர்வோ கிடையாது. ஆயினும் முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் பாதிப்புகளை இழிவளவாக்கிக்கொள்ள முடியும். இரத்த பரிசோதனையே இதனை கண்டறிவதற்கான பிரதான வழி என்பதால் இது தொடர்பில் ஒவ்வொருவரும் தம்மை பரிசோதித்துக்கொள்வது கட்டாயமாகும். இலங்கையில் ஆண்கள்  எயிட்ஸ் நோய்க்கு ஆட்படும் வீதம் அதிகரித்துள்ளது.

25 தொடக்கம் 45 வயதிற்கிடைப்பட்டவர்களுக்கிடையிலேயே பரவலாக உள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது. தவறான பாலியல் நடத்தைகளும் இதற்கு பின்புலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எதிர்வரும் எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் சுகாதார அமைச்சர் டாகடர் ராஜித சேனாரத்ன தலைமையில் முன்னெடுக்கப்படவுள்து.

இதற்கிணங்க கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் இரத்த பரிசோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்தும் டிசெம்பர் முதலாம் திகதி முன்னெடுப்படவுள்ளது.  அத்துடன் 1000 மேற்பட்ட பதாதைகள் நாடு ழுழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.  மாவட்ட மத்தியஸ்தானங்களிலும் இது குறித்த விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்ப்பட்டள்ளது.

இலங்கையிலிருந்து பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களை இல்லாதொழித்து நோய்களிலிருந்து விடுதலைப்பெற்ற நாடாக இலங்கையை மாற்ற அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையில் எயிட்ஸ் நோயையும் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைவரும் ஒன்றணைந்து செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.

Comments

comments, Login your facebook to comment