sanga-penpaar-pulavargal1முஸ்லிம் விவாக சட்டத்தின் பிரகாரம்12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி உள்ளது. எனவே, ஒவ்வொரு முஸ்லிம் மாணவியின் கல்வியிலும் உரிமையை 18 வயது வரைக்கும் கல்வி அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி. எம்.பி வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது உரையாற்றுகையில்;

முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. கல்வி பயின்ற பெண்கள் இதற்கு முன்னிலை வகித்து செயற்படுகின்றனர். எனினும் முஸ்லிம்களின் கலாசாரத்தை நான் முழுமையாக மதிக்கிறேன். அவர்களின் கலாசாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

எனினும் இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களின் உரிமையை பிரித்து செயற்பட இடமளிக்க முடியாது. அனைத்து தரப்பினருக்கும் கல்வி உரிமை சரிசமமாக பகிரப்பட வேண்டும்.

முஸ்லிம்களின் கலாசாரத்தின் பிரகாரம் 12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அனுமதியுள்ளது. ஆனாலும் முஸ்லிம் பெண்கள் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வி பயின்றால் மாத்திரமே நமது முஸ்லிம் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்.

எனவே நாட்டில் வாழும் சிறுமிகள் அனைவருக்கும் 18 வயது வரைக்கும் கல்வியை வழங்குவது கல்வி அமைச்சரின் பொறுப்பாகும். எனவே அமைச்சர் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அத்துடன் வடக்கு, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பாடசாலை உட்கட்டமைப்பை விருத்தி செய்ய வேண்டியது அவசியம். வடக்கு பாடசாலை நிலைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பார்வையிட முடியும்.

அத்துடன் கணித பாடம் கட்டாயம் ஆக்கப்படுவது அவசியமாகும். கணித பாடம் அறிவின் மதிப்பிடுதலுக்கு அவசியமாகும்.

இலங்கையின் கல்வி தரம் பாதுகாக்கப்படுவது கணித பாடத்திற்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தினாலாகும். ஆகவே, கணித பாடத்தின் தரத்தை குறைக்க வேண்டாம். கணிதம் பாடம் கட்டாயமாக்கப்படுவது காலத்தின் தேவையாகும் என்றார்.

Comments

comments, Login your facebook to comment