625.0.560.320.160.600.053.800.668.160.90_1வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று(23) அதிகாலையில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

குறித்த சம்பவத்தினால் புளியங்குளம், இராமனூர் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பல பயன்தரும் மரங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அப்பகுதியில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பின்னால் வந்த யானைகள் அங்குள்ள பயன் தரும் மரங்களை அழித்த நிலையில் அங்கு கடமையில் நின்றவர்கள், அயலவர்கள் உதவியுடன் கூச்சலிட்டும், பாரிய சத்தங்களை எழுப்பியும் யானைகளை அங்கிருந்து விரட்டியுள்ளனர் என கூறப்படுகின்றது.

மேலும், அப்பகுதி மக்கள் குடியிருப்புக்குள் அடிக்கடி யானைகள் ஊடுருவுவதாகவும் இதனால் தாம் அச்சத்துடனேயே வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)_1625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90_1

Comments

comments, Login your facebook to comment