மட்டக்களப்பு வாவிகளில் வழமைக்கு மாறாக பாம்புகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக தெரிய வருகிறது.

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் பாம்புகள் கரையொதுங்குவதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.

முக்குலியான் எனப்படும் ஒருவகை பாம்புகள் கரையொதுங்குவதால் மீனவர்களின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்புக்கள் ஒரு அடியிலிருந்து இரண்டரை அடி நீளமானதாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கால நிலை மாற்றத்தினால் இந்த பாம்புகள் கரையொதுங்கி இருப்பதாக மீன்பிடி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி காலப்பகுதியில் இவ்வாறு இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கி இருந்தன.

தற்போதும் அதே காலப்பகுதியில் பாம்புகள் கரையொதுங்குவதால் மீண்டும் ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment