625.500.560.350.160.300.053.800.900.160.90 (2)போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் கொழும்பில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் சந்தேகநபர்களை தேடி கொழும்பில் தோட்டப் பகுதிகளில் திடீர் தேடுதல் வேட்டைகளை நடத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருளை கண்டிறிய பயிற்றப்பட்ட மோப்ப நாய்களையும் பயன்படுத்தவுள்ளனர்.

கொழும்பு வடக்கு பிரிவுக்கு பொருப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லயணல் குணதிலகவின் திட்டத்தின் கீழேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த திட்டத்தின் கீழ் நேற்று மட்டக்குளி, சமித் புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 10 பேர் வரையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment