சற்றுமுன் வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து பயணித்த வவுனியா நகரசபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்துடன் (ட்ரக்ரர்) மன்னார் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று உழவு இயந்திரத்தை கடந்து செல்ல முற்பட்ட வேளையில் உழவு இயந்திரத்தின் பெட்டி பகுதியில் கயஸ் வாகனம் மோதுண்டதினாலேயே  இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இதில் கயஸ் வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.IMG_2578IMG_2580 IMG_2581 IMG_2582 IMG_2586 IMG_2589 IMG_2590 IMG_2592 IMG_2594 IMG_2596 IMG_2605 IMG_2604 IMG_2603 IMG_2602 IMG_2599 IMG_2607 IMG_2608 IMG_2609 IMG_2610 IMG_2611

Comments

comments, Login your facebook to comment