யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் நாள் இன்று(25) 12 மணியளவில் நினைவுகூரப்பட்டுள்ளது.

குறித்த நினைவஞ்சலி யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடும் அச்சுறுத்தல்கள், கண்காணிப்புக்கள் மத்தியிலும் மாணவர்கள் மேற்படி நினைவஞ்சலியை நடத்தியுள்ளனர் என கூறப்படுகின்றது.

பல்கலைக்கழகத்திற்கு வெளியே சிவில் உடையில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் காணப்பட்ட போதும் மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் நினைவுகூரலை நடாத்தியுள்ளனர். இதேபோல் அரசாங்கம் மாவீரர் நாளை அனுட்டிக்க கூடாது என கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலேயே இந்த நினைவுகூரல் நடைபெற்றுள்ளது.

இதன் போது மாவீரர்களின் அடையாளப்படம் வைக்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள மாவீரர்கள் நினைவிடத்தை சுற்றி தென்னங்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment