நாளை வவுனியா வைரவப்புளியங்குளம் மைதானத்தில் படைத்தரப்பினரால் நடாத்தப்பட மேற்கொள்ளப்பட்ட களியாட்ட நிகழ்வு இன்று பிற்பகல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மாவீரர் தின்தைமுன்னிட்டும் நாளை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு படைத்தரப்பினரால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட களியாட்ட நிகழ்வுகள் பொதுமக்களின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்நிகழ்வினை இரத்துச் செய்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த இரண்டு தினங்களாக இரவு பகலாக களியாட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு படைத்தரப்பினர் மேடை அலங்கார வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளதுடன்  பொலிசார் இரவு பகல் காவல் பணிகளையும் மேற்கொண்டிருந்தனர் தற்போது மக்களின் எதிர்ப்பு காரணமாக அமைக்கப்பட்ட மேடைகளை சற்று முன்னர் அகற்றிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. DSC_1204DSC_1204 DSC_1207 DSC_1208 DSC_1210 DSC_1211 DSC_1212 DSC_1214

Comments

comments, Login your facebook to comment