625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு நேற்று(24) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

இனம் தெரியாத நபர்களால் திணைக்கள வளாகத்தில் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று லட்சம் பெறுமதியிலான மோட்டார் சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டு விடுதியில் நித்திரையில் இருந்த வேளையில் நள்ளிரவில் வந்த இனம் தெரியாத நபர்கள் காவோலைகளை மோட்டார் சைக்கிளின் மேல் போட்டு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறையிட்டதினை தொடர்ந்து விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் அண்மைக்காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் ,நாயாறு போன்ற பிரதேசங்களில் உள்ள களப்புக்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களோடு கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் முல்லை மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment