625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)அம்பாறை கல்முனை பிரதான வீதியிலுள்ள மல்வத்தை நாற்சந்தியில் இராணுவமுகாம் ஒன்றிற்கான பெயர்த்தாங்கி அமைக்கப்பட்டுவருவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

மல்வத்தைச் சந்தியில் 24வது படைப்பிரிவின் முகாமிற்கான பெயர் தாங்கிய தூபியொன்று அமைக்கப்படுவது குறித்து பொதுமக்கள் தம்மிடம் அதிருப்தி தெரிவித்ததாக தமிழ்த் தேசியக்.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் செயலாளர் மாவை சேனாதிராஜாவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அந்த தருணம் கருத்துரைத்த மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில்,

தமிழ் மனங்களை வெல்லும் வகையில் நல்லாட்சி அரசாங்கமும் அதிகாரிகளும் அரச நிர்வாகமும் நடந்துகொள்ள வேண்டும். தமிழ்மக்களை முற்று முழுதாகக் கொண்ட மல்வத்தையில் இடப்பரப்புக் குறைவான வீதிச்சுற்று வட்டத்தில் பெயர்த்தாங்கியொன்று அவசியம்தானா?

அருகில் பெயர்ப்பலகையொன்று இட்டால் போதுமானது. எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசவுள்ளேன்.

மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அது தொடரக் கூடாது இன புரிந்துனர்வு நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் போரினால் மடிந்து கிடக்கின்ற தமிழ்ச்சமுகத்தின் மனங்களை முதலில் வென்றெடுக்க வேண்டும். இன்றேல் நாட்டில் நல்லிணக்கம் என்பது கானல் நீராகத்தானிருக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கூறுகையில்,

மல்வத்தைச் சந்தியில் இராணுவமுகாம் பெயர்த்தாங்கி அமைப்பது குறித்து நேற்று நான் அங்கு சென்றபோது பொதுமக்கள் சிலர் என்னிடம் அதிருப்தி தெரிவித்தனர். தமிழ் அரசியல் வாதிகள் தம்மைக் கவனிப்பதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழினத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதை தடைசெய்ய அல்லது விமர்சிக்கின்ற இன்றைய நிலையில் தமிழ்ப்பிரதேசத்தில் இவ்வாறானதொரு பெயர்த்தாங்கி அவசியம்தானா? நல்லாட்சி அரசாங்கம் இப்படிப்பட்ட அநாகரீகமான செயற்பாடுகளை தடுத்தநிறுத்த வேண்டும்.

நாட்டிலே சமாதானம் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான் இன்றைய ஜனாதிபதியையும் நல்லாட்சியையும் தெரிவுசெய்தது தமிழ்ச் சமூகம். வீதிச்சுற்று வட்டத்திற்கு இடம் குறைவான அச்சந்தியில் தமிழ்மக்கள் முழுமையாக வாழுகின்ற இடத்தில் இத்தகைய பெயர்த்தாங்கி அமைக்கப்படுவது பொருத்தமல்ல.

இது இனநல்லிணக்கத்திற்கு குந்தகமாக அமையும். அதற்காகவே எமது கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு பொதுமக்கள் சார்பாக முறையிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

Comments

comments, Login your facebook to comment