625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்ததினம் நாளை சனிக்கிழமை(26) கொண்டாடப்படவுள்ளதுடன் நாளை மறுதினம் மாவீரர்நாளும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் பொலிஸாரின்கெடுபிடிகள் இன்று மாலை முதல் அதிகரித்துக் காணப்படுகின்றது.

குறிப்பாக யாழ்.நகர், நகரை அண்டிய பகுதிகள் உட்படக் குடாநாட்டின் பலபகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப்பலத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளிலும் வீதியால் செல்லும் வாகனங்கள்அனைத்தும் மறிக்கப்பட்டுச் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

குறிப்பாகக் கொக்குவில் சந்தியில் துப்பாக்கியை ஏந்திய ஆண் பொலிஸாருடன், பெண்பொலிஸாரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றிரவு வலிகாமத்தின் ஏழாலை பகுதியில் துப்பாக்கிகள் மற்றும்பொல்லுகளுடன் திடீரென வந்திறங்கிய பொலிஸ் குழுவினர் வந்திறங்கியுள்ளமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment