625.0.560.320.160.600.053.800.668.160.90தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிங்கள மொழி பாடசாலையில் கல்வி பயிலும் 14 வயதுடைய மாணவர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவர் இன்று காலை லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 23ஆம் திகதி குறித்த மாணவன் பாடசாலையில் இருந்து தனது வீட்டுக்கு செல்லும் போது இனந்தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவன் மயக்கமடைந்து சில நிமிடங்களுக்கு பின் தனது வீட்டுக்கு சென்றதாக மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தாக்கிய நபர்கள் குறித்த மாணவனின் வலதுகரத்தில் “தமிழ்” என எழுதிவிட்டு சென்றதாக மாணவன் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான மாணவனை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக லிந்துலை வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.625.0.560.320.160.600.053.800.668.160.90625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment