யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார், பேருந்து ஒன்று இன்று இரவு (25) மன்னார் பிரதான பாலத்திற்கருகில்விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச பேருந்து ஒன்றின் சாரதிக்கும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட போட்டி தன்மை காரணமாகவே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி உட்பட 07 பேர் வரையில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் போட்டி தன்மை ஏற்பட்டு வருகின்றமையினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாகவும் பயணிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் பல்வேறு முறைப்பாடுகள் வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டபோதும் எந்த ஒரு தீர்வும் பெற்றுத்தரப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.15152925_1336081823111307_573651872_o15182537_1336081889777967_1926228891_o 15215850_1336081729777983_637446501_o 15215868_1336081683111321_2097921867_o 15224586_1336081969777959_1877873105_o 15231500_1336081596444663_62172355_o_1

Comments

comments, Login your facebook to comment