DSC_1260வவுனியாவில் பல இடங்களில் இன்று (26) பிற்பகல் வேளையில் தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிற்நதநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக காணப்படுகின்றன.
கூமாங்குளம், வேப்பங்குளம், கணேசபுரம், பத்தினியார்மகிழங்குளம், நெளுக்குளம், பூந்தோட்டம் பகுதிகளிலே சுவர்களிலும் நிலத்திலும் சுவரொட்டிகள் காணப்படுகின்றன. பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் மொழுகுதிரியில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் என சுவரொட்டியில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்த தின நிகழ்வுகள் வடகிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் வேளையில் வவுனியா நகர் பகுதிகளிலும் தலைவர் பிரபாகரனுக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதேவேளை நாளை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கதுDSC_1260DSC_1261 DSC_1262 DSC_1264 DSC_1265 DSC_1270 DSC_1271 DSC_1274

Comments

comments, Login your facebook to comment