நாடாளுமன்றத்தில் இன்று அரச சேவைகள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 2009ம் ஆண்டுக்கு பின்னர் 10 ஆயிரத்து 719 விடுதலை புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் இன்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களில் 12 ஆயிரத்து 173 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது 150 விடுதலை புலி உறுப்பினர்கள் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள் என்றும் அவர்களுள் 66 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்,1700ற்கும் அதிகமானவர்கள் ஒரு வருடகாலமாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் 77 கைதிகள் 7 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேடகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment