நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாகஇருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாகஇருக்க வேண்டும்.என்று சொன்னவர் கௌதம புத்தர்.

கௌதம புத்தரின் போதனைகளை கற்று பௌத்த மதத்தையே வழிபடும் இராணுவத்தினர்முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளையில் உத்தம தர்மத்தை அறிந்து போரிட்டமாவீரர் துயிலுமில்லங்களை அழித்து அங்கே புத்தர் சிலையை வைத்துவழிபடுகின்றார்கள்.

குறித்த இராணுவ அதிகாரிகளின் எண்ணங்கள் யாவும் தமிழ் மக்களுக்கு துன்பம்தருவதாகவே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை தூயிலும் இல்லத்தில்மாவீரர்களுக்கான அஞ்சலிகள் நிகழ்த்தப்படாமல் இருக்க சிறப்பு பாதுகாப்புகள்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தம தர்மத்தை அறிந்த ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது, அவ்வுத்தமதர்மத்தைக் காணாத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது. என்றும் கௌதமபுத்தர் போதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment