முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் 3,114 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டிய தேவையுள்ளதாக முல்லைத்தீவு மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேசத்தில் மீள்குடியேறிய குடும்பங்களில் இதுவரை 7,555 குடும்பங்களுக்கு மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.

எனினும், 1,257 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்றும் விரைவாக மின்னிணைப்பை வழங்கும் படியும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, மின் இணைப்புகள் தொடர்பாக 1,065 குடும்பங்களுக்கு கடனடிப்படையில் மின்னிணைப்புக்களை வழங்குவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மின்சாரசபை தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment