கண்டி – கடுகஸ்தோட்டை, பரிகம பிரதேசத்தில் நேற்று இரவு காரும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒருவர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காரின் சாரதி குடிபோதையில் வாகனம் செலுத்தியதனாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

காரின் சாரதி கடுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் , அவர் கண்டி நீதவானிடம் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment