wp-1480223217406.jpgவவுனியாவில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவு நாள் அனுஷ்டிக்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வுக்காக மண்டபங்களை வழங்குவதற்கு பலரும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

வவுனியா நகரசபை மண்டபத்தை வழங்குவதற்கு நகரசபை செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே போல் சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபம், முத்தையா மண்டபம், சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாச்சார மண்டபம் என்பவற்றை ஏற்பாட்டுக் குழு அணுகிய போதும் அவர்கள் அதனை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, இதில் சில மண்டபங்களுக்கு பொறுப்பாக உள்ளவர்கள் அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிட இருப்பவர்கள். அவர்களே மண்டபத்தை வழங்க முன்வராதது குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment