DSC_0047வவுனியா நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகண்டன தூபியில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர் மாதிரிக்கு இன்று 27.11.2016 மாலை 6.05மணிக்கு சுடர் ஏற்றி  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் திரு. ராஜ்குமார், வடமாகாணசபை உறுப்பினர் திரு. ம. தியாகராசா, முன்னாள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் திரு. கி. தேவராஜன், கையளிக்கப்பட்ட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி திருமதி. ஜெயவதனா, மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மலர் அஞ்சலியையடுத்து ஈகச்சுடரினை சிவசக்தி ஆனந்தன், பிரஜைகள் குழுவின் தலைவர் இணைந்து ஏற்றி வைத்தனர். ஈகச்சுடர் ஏற்றும்போது வணக்கம் சொல்லி வணங்குகின்றோம் எங்கள் வீரர் உங்கள் மலர்பாதம் எனும் பாடலுடன் உணர்வு பூர்வமான ஆரம்பமானது. அஞ்சலி செலுத்திய உறவினர்களின் கதறலுக்கு மத்தியில் இடம்பெற்றது.DSC_0027DSC_0031 DSC_0034 DSC_0038 DSC_0039 DSC_0043 DSC_0045 DSC_0046 DSC_0047 DSC_0050 DSC_0051 DSC_0053 DSC_0064 DSC_0068 DSC_0069 DSC_0071 DSC_0073

Comments

comments, Login your facebook to comment