வவுனியா நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகண்டன தூபியில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர் மாதிரிக்கு இன்று 27.11.2016 மாலை 6.05மணிக்கு சுடர் ஏற்றி  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் ஆரம்பமான சமயத்தில் பொதுமகன் ஒருவர் அஞ்சலி செலுத்தப்பட்ட இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் வாக்குவாதப்பட்டார்.

யுத்தத்தில் மாவீரர்களாக இறந்தவர்களின் புகைப்படம் இங்கு வைத்து அஞ்சலி செலுத்தவில்லை, இதுவரை மக்களுக்கு இந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்றார்கள் செய்தார்களா? என பாராளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பினர்.திகைத்து போய் நின்ற பாராளுமன்ற உறுப்பினர்.

இதனால் சிறிது நேரம் அவ்விடம் பரபரப்பாக காணப்பட்டது.

DSC_0018 DSC_0019

Comments

comments, Login your facebook to comment