625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில் துணிகரமான முறையில் வவுனியா நகர சபையின்முன்னாள் உப தலைவர் எம்.எம்.ரதன் சுடர் ஏற்றி மாவீரர் நினைவேந்தலை இன்று (27)மாலை அனுஷ்டித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகொள்ளும் மாவீரர் தின நினைவேந்தல்’ நிகழ்வு வடக்கின் பல பாகங்களில் இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ் மக்களுக்காக உயிர் நீத்தமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப தலைவர் எம்.எம்.ரதன் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் முன் இன்று மாலை 5 மணியளவில் சுடர் ஏற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை மாவீரர்களை நினைவு கூறும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் தனது குடும்பத்துடன் தனது இல்லத்தில் இன்று(27) மாலை தமிழ் மக்களின் விடிவிற்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலனின் துனைவியாரின் இரு சகோதரர்கள் மாவீரர்களாகியுள்ள நிலையில் குறித்த மாவீரர்களையும் நினைவுகூர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் தனது குடும்பத்துடன் தனது இல்லத்தில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment