யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் மாவீரர் தின நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பகுதிகளிலுள்ள வீதிகள் மற்றும் மதில்களில் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடிய மாவீரர்களை நினைவுகூர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மாவீரர் நாள் நவம்பர் 27 எனக் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகளில் மீண்டும் வருவோம் தலைவர், எங்கள் அண்ணன் பிரபாகரன், எங்கள் அண்ணன் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் இன்று பல்வேறு இடங்களில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாகக் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இராணுவத்தின் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

download (1)download (2) download (3) download (4) download

Comments

comments, Login your facebook to comment