625.500.560.350.160.300.053.800.900.160.90மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் நிலையம் ஒன்றை நீர்கொழும்பு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

அங்கிருந்த நிலையத்தின் முகாமையாளர் எனக் கூறப்படும் பெண் உட்பட நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு குடாபாடு பிரதேசத்தில் இயங்கிய இந்த பாலியல் தொழில் நிலையத்தை முற்றுகையிட நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றிருந்த பொலிஸார், வாடிக்கையாளரை போல் ஒருவரை அனுப்பி இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

பொலன்நறுவை பிரதேசத்தை சேர்ந்த பெண் இந்த நிலையத்தின் முகாமையாளராக செயற்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய பெண்கள், மெல்சிறிபுர, பொலன்நறுவை, தெமன்ஹந்திய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment