garnet-1முல்லைத்தீவு மன்னாகண்டல் வசந்தபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி சட்டவிரோதமான முறையில் குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரத்து 500 லோட்மணலை கைப்பற்றியதுடன் இதனை சேமித்து வைத்திருந்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் பகுதியில் கிளிநொச்சி மாவட்ட விசேட போதைப்பொருள் குற்றத்தடுப்புப்பிரிவு பொலிசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26-11-2016) 9.30 மணிக்கு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரமின்றி சுமார் இரண்டாயிரத்து 500 லோட் மணலை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த ஒருவரைக் கைது செய்ததுடன் குறித்த மணல் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆயரபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

Comments

comments, Login your facebook to comment