FotorCreated-439உணர்வு ரீதியான அஞ்சலிகளே உயிர்த் தியாகங்களுக்குரிய உண்மையான அஞ்சலியாகும் என வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிலாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று(27) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட போதிலும் வவுனியாவில் மாவீரர் துயிலுமில்லங்களில் இன்னமும் இராணுவம் முகாம் அமைத்து நிலை கொண்டுள்ளனர்.

எதிர்வரும் வருடம் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடாத்த வவுனியா மக்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

வவுனியா மாவட்ட மக்கள் சொந்த மாவட்டத்தில் அஞ்சலி செலுத்த ஏதுவாக படையினர் முகாமை அங்கிருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நல்லெண்ணம் என்பது ஏட்டுச் சுரக்காய் இல்லை.சிறுபான்மைச் சமூகத்தின் பசியை, உணர்வை புரிந்து கொள்ளாவிட்டால் நல்லெண்ணம் என்பது வெறுமனே எழுத்துக்கோர்வையாகவோ, வாய்ச் சொல்லாகவோ இருந்து விடும்.

எமது மக்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி மரணித்த உறவுகள் விதைக்கப்பட்ட இடங்களிலேயே நாம் சுதந்திரமாக அஞ்சலி செய்யும் உரிமைகளை மறுக்கின்ற அரசாங்கம் எமக்கு நியாயமான, எமது தியாகங்களுக்கு ஈடான, நிரந்தர அமைதிக்கான, நிலையான மற்றும் சட்டபூர்வமான அரசியல் உரிமையை வழங்குமா? என்ற சந்தேகம் இந்த நல்லாட்சி மீதும் எழுகின்றது.

கடந்தகால அரசாங்கங்களைப் போல் இல்லாமல் மீண்டும் எமது மக்களை ஏமாற்றாமல் விரக்தி நிலைக்கு செல்லாமல், அரசியல் தீர்வில் நம்பிக்கை வைக்க நல்லெண்ணத்தை வெளிப்படுத்த அரசு சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed-4-15கூட்டு பொறுப்பு இருந்தால் இலக்கை எட்ட முடியும்: முன்னாள் எம்.பி வினோ

கூட்டு பொறுப்பு இருந்தால் நாம் எமது இலக்கை எட்டமுடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ தெரிவித்துள்ளார்.

வவுனியா, கல்மடுவில் இன்று இடம்பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல சவால்களுக்கு மத்தியில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் சிறப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது.

தயார்படுத்தல்கள் குறைவாக இருந்தாலும் அந்த உணர்வுபூர்வமான பங்களிப்பு இருந்ததன் காரணமாக மிக சிறப்பாக செய்து முடிக்ககூடியதாக இருந்தது.

அந்த நிலைமை வேறு தேவைகளுக்கும் எங்களுக்குள் நல்ல விழிப்புணர்வு இருக்க வேண்டும். கூட்டு பொறுப்பு இருந்தால் நாம் எமது இலக்கை அல்லது செய்பவற்றை எட்ட முடியும்.

இந்த கட்டிடம் கூட கூட்டு பொறுப்புடன் செயற்பட்டதால் தான் கட்டி முடிக்க முடிந்தது. அதன் பயன்பாடு மட்டுமல்ல எமது எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண கூட்டு பொறுப்பு அவசியம் என சுட்டிக்காட்டினார்.

மேலும், அதற்கு நீங்கள் எல்லோரும் ஒன்றாக செயற்பட்டு ஒரே திசையில் பயணித்தால் அதன் பயனை அடைய முடியும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment