625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பாதுகாப்பு பிரிவுகளில் பதவி பெற்றுக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட அதிகாரிகள் பலர் குறித்ததான தகவல் உள்ளடக்கப்பட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இராணுவ சூழ்ச்சி இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வெளியிட்ட கருத்து தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.

அதனுடனே பாதுகாப்பு பிரிவுகளில் அரசியல் நடவடிக்கைகளுக்கு தொடர்புப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஊடகத்தின் செய்தி அறிக்கைகளுக்கமைய, கடந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக நேரடியாக உதவி செய்த பாரிய அளவிலான இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் அந்த இராணுவ அதிகாரிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை அரசாங்கத்தின் பிரதானிகளிடம் வழங்குவதற்கு சட்டரணிகள் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும், அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் தற்போது வரையில் இராணுவ அதிகாரிகள் பலர் சூழ்ச்சியான முறையில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

விசேடமாக இனவாதம், மதவாதம் போன்றவற்றை பரப்பி சமூகத்திற்கு மீண்டும் சிவில் போராட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பு பிரிவினுள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் இந்த குழுவினரால் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய இராணுவ புலனாய்வு பிரிவு இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக 2007ஆம் இலக்க 56 சிவில் மற்றும் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சட்டத்திற்கமைய குற்றம் சுமத்தி, அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அறிந்துக் கொள்ள முடிந்தன.

அந்த சட்டத்தின் 3.1 அதிகாரத்திற்கமைய எந்தவொரு நபரினாலும் யுத்தத்தை பரப்புவதற்கு அல்லது பேராட்ட செயற்பாடுகளில் ஈடுபடுதல், இன ரீதியான மற்றும் மத ரீதியான கோபத்தில் செயற்படக் கூடாது.

” இதன் கீழ் கைது செய்யப்பட்டால் 5 முதல் 45 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவதோடு பிணை வழங்கப்படாது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக இதன் கீழ் தான் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அது ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான போலியான ஒப்பந்தம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இனவாத கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த புலனாய்வு பிரிவு அறிக்கைக்கமைய தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் இராணுவ தளபதி லெப்டினன்ட் தயா ரத்நாயக்கவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

புதிய வருடத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 5 பக்கத்திலான நீண்ட ஆவணம் ஒன்றை ஜனாதிபதியை இலக்கு வைத்து வெளியிட்டமை, இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அவசரமாக உலர் உணவுகளை அனுப்பி வைத்தமை, தேர்தல் தினத்தன்று காலை இராணுவ தளபதி பாதுகாப்பு படைத்தளபதிகளுக்கு தொலைப்பேசியில் அழைப்பேற்படுத்தி ராஜபக்சர்களின் வெற்றிக்காக அர்ப்பணிக்க வேண்டும் கூறியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அவர் அப்போதைய காலப்பகுதியில் பகிரங்கமாக அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ப்புப்பட்டுள்ள நிலையில் 2015ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவின் குருணாகல் தேர்தல் நடவடிக்கைகளுக்காக நேரடியாக தலையிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் புலனாய்வு பிரிவு பிரதானியான மேஜர் ஜெனரால் கபில ஹெந்தாவிதாரண, நேரடியாக அரசியல் நடவடிக்கைளில் ஈடுப்பட்டிருந்தார். அலுத்கமையில் இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல் தொடர்பிலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது வரையில் ஓய்வு பெற்றுள்ள அப்போதைய கிழக்கு படைதளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரால் லால் பெரேரா இராணுவ சிப்பாய்களுக்கு மஹிந்த ராஜபக்சவின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்ட டீசேட்களை அணிவித்து, துண்டுபிரசூரங்கள் பகிர்தல் மற்றும் போஸ்டர் ஒட்டுவதற்கு பயன்படுத்தல், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அந்த மாகாணத்தினுள் சேறு பூசும் பிரச்சாரங்களை மேற்கொண்டமை, அம்பாறை, திருகோணமலை மற்றும் பொலநறுவை பிரதேசங்களில் வெள்ளநீர் நிவாரணம் வழங்கும் வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய மாகாண தளபதியாக இருந்த மேஜர் ஜெனரால் மனோ பெரேராவினால் பதுளை, மண்சரிவு இடம்பெற்றமை சந்தர்ப்பத்தில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றால் ராஜபக்சர்கள் வெற்றி பெற வேண்டும் என மக்களுக்கு கூறியமை,

மேஜர் ஜெனரால் பிரசாத் சமரசிங்க முழுமையாக இராணுவத்தினருக்கும் கட்டளையிடும் அதிகாரிகளை இராணுவ தலைமையகத்திற்கு அழைத்து ராஜபக்சர்களின் சேவை குறித்து கூறியதோடு விருந்து வைத்து ராஜபக்சர்கள் வெற்றி பெறுவதற்காக செயற்பட வேண்டும் என கூறியமை, தபால் வாக்களிப்பிற்கு அழுத்தம் பிரயோகித்தமை,

நிதி மேலாண்மை கிளை பணிப்பாளர் நாயகம் ஆர்.வீ.உடவத்த (ஜெனரால் சரத் பொன்சேகாவுக்கு எதிராக போலி சாட்சி வழங்கி ஒருவர்) மற்றும் ஊடக பணிப்பாளர் சபையின் பிரிகேடியர் கே.ஜே.ஜயவீரவினால் அரசாங்க வரவு செலவு யோசனை உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரதிகளை ஜனாதிபதி தேர்தலுக்காக அச்சரிட்டு பகிர்ந்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஆயுதப்படைகள் ரெஜிமென்ட்டின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரால் மிலிந்த பீரிஸ், மற்றும் இராணுவ பொலிஸின் மேஜர் ஜெரால் விஜேசிரி ஆகியோருக்கும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தயா ரத்நாயக்கவின் தலையீட்டில் இராணுவத்தின் உளவியல் பணிப்பாளர் சபையினால் உடுவே தம்மாலோக்க தேரரை பயன்படுத்தி இராணுவத்தினுள் மற்றும் பிரதேச ரீதியில் முழுமையான மக்களை அழைத்து அரசியல் போதனைகள் மேற்கொண்டமையின் ஊடாக தேர்தல் பிரச்சார நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை அண்மையில் திடீர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெனரால் சுமதி மானவடுவ (2010 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகுவதற்கு முன்னர் சினமன் கிரேன்ட் ஹோட்டலை சுற்றிவளைதத்தமை மற்றும் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதும் இவரினாலாகும்) மேஜர் ஜெனரால் ஜகத் விஜேசிரி, மேஜர் ஜெரால் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரால் ஷசேந்திர சில்வா உட்பட குழுவொன்று 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரகசிய செயற்பாட்டு குழுவில் இணைந்துள்ளார்.

அந்த குழு கோத்தபாய ராஜபக்சவின் கீழ் மேஜர் ஜெனரால் என்.எஸ்.ஆர்.சொய்ஸாவினால் நடத்தி செல்லப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி கொழும்பு விசேட பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் மீண்டும் அதிகாரத்தை பிடித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பகுதியாக செயற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பிலான தகவல்கள் அன்றைய தினமே வெளியாகியுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கு எதிர்க்கட்சி முன் வந்ததுடன், இந்த சூழ்ச்சி தொடர்பில் மங்கள சமரவீர குற்ற விசாரணை திணைக்களத்திற்கு முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ள போதிலும், அந்த விசாரணைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படவில்லை.

அத்துடன் யாழ்ப்பணத்தின் முன்னாள் படை தளபதி தனது சேவைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் நீக்கப்பட்டதுடன், வெளிநாட்டில் வசிக்கும் மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் (வெள்ளை வேன் கும்பலின் பிரதானியான செயற்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டவர்) வடக்கு பகுதியின் படைதளபதியாக நியமித்து அவரை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்துவதற்காக மேஜர் ஜெனரால் மஹிந்த ஹதுருசிங்கவினால் இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்களிடம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார துண்டுபிரசூரங்கள் பகிர்ந்தமை,

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் கும்பல்களை (ஆவா குழு போன்ற) உருவாக்கி அச்சத்தை ஏற்படுத்தி, வடக்கு மக்கள் வாக்களிப்பதைனை தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்து.

இராணுவ சட்டத்தரணிகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சட்டதரணிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக்குவதற்கு பிரிகேடியர் ரஞ்சித் ராஜபத்திரனவினால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையின் ஊடாக அந்த சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்கு இந்த இராணுவ அதிகாரியினால் முன்னாள் ஜனாதிபதிக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக இராணுவ சிப்பாய்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்தியமை, மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றிப்பெற்றால் ஏற்பட கூடிய ஆபத்துகள், சாதகமற்ற தன்மை,

இனவாதங்கள் பரப்படுகின்றமை ஆகிய விடயங்கள் இராணுவ அதிகாரிகளினுள் மனதினுள் ஏற்படுகின்ற வகையில் மனரீதியான செயற்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த முடியும் என சட்ட பிரவு தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவின் வியமக என்ற அமைப்பில் நாடு முழுவரும் 100 மாநாடுகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரினால் அண்மையில் காலியில் இடம்பெற்ற மாநாட்டில் தேசிய பாதுகாப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கில் மீண்டும் யுத்தம் ஏற்பட கூடும் என்ற கருத்துக்கள் வெளியிப்பட்டமை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை அண்மையில் அவரினால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இராணுவ சேவையில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அந்த வளங்கள் மற்றும் அந்த அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது சட்ட விரோதமான செயல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ சேவையில் ஈடுபட்ட காலப்பகுதியில் அரசியல் நடவடிக்கை மேற்கொண்டமை ராஜபக்ச ஆட்சியில் சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றத்தின் முன்னால் சுமத்தப்பட்ட பாரிய குற்றச்சாட்டாகும்.

அதற்கமைய குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என சட்டதரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எப்படியிருப்பினும் ராஜபக்சர்கள் செயற்படுத்திய இந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு நேரடியாக எதிர்ப்பு வெளியிட்ட அதிகாரிகள் உள்ள நிலையில் ஜனவரி மாதம் 8ஆம் தினம் மேற்கொள்ளப்படவிருந்த இராணுவ சூழ்ச்சி அதற்கமைய தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேடமாக மேஜர் ஜெனரால் உபய மெதவெல அதற்காக தலையிட்டுள்ளார்.

அத்துடன் அது வரையில் வெளிநாட்டில் சேவையில் ஈடுப்பட்டிருந்த இராணுவ தளபதி கிரிஷாந்த டி சில்வா இந்த சூழ்ச்சியில் தொடர்புப்படுத்துவதற்கு கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ள போதிலும் கிரிஷாந்த டி சில்வா அதனை நிராகரித்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்திற்கு தொடர்புப்பட்டிருந்த போதிலும் அரசியலுக்கு நடவடிக்கைகளுக்கு தொடர்புபடாமல் இருந்த உயர் இராணுவ அதிகாரிகள் சிலரை அரசாங்கத்தின் உயர் பதவிகள் சிலவற்றில் நியமிப்பதற்காக சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இரண்டு யோசனைகளை சமர்ப்பித்திருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் மற்றும் வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக சில அதிகாரிகளுக்குள் காணப்படுகின்ற வருத்தத்தை சமப்படுத்துவதற்காக விசேட வேலைத்திடம் ஒன்றை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தினேஷ் குணவர்தன இராணுவ சூழ்ச்சி தொடர்பில் சுமத்தும் குற்றச்சாட்டில் எவ்விதமான உண்மையும் இல்லை என இராணுவ புலனாய்வு பிரிவு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலர் இராணுவத்தின் உயர் பதவிகளில் செயற்படுகின்றமைக்கு மேலதிகமாக தற்போது வரையில் யாழ்ப்பாணத்தின் படை தளபதியாக உள்ள மேஜர் ஜெனரால் மஹேஷ் சேனாநாயக்க எதிர்கால இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டால் ராஜபக்ச தரப்பினர் கொண்டு சென்ற இனவாதி அரசியல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதனை அடிப்படையாக கொண்டு இராணுவ சூழ்ச்சி கதை உருவாக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதென அரசாங்க தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment