முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதிகளில் கட்டாகாலி மாடுகள் அதிகமாக காணப்படுகின்றது. அவை வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்துகின்றது. அத்துடன் விளைந்த நெற்பயிர்களையும் சேதப்படுத்துகின்றது என புதுகுடியிருப்பு பிரதேச சபை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டாகாலி மாடுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் வீதிவிபத்துகளை தடுக்கமுடியும் அத்துடன் விபத்துகளில் சிக்கும் மாடுகளையும்; பாதுகாக்கமுடியும் என குறித்த பிரதேச சபை அதிகாரி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதினால் வீதி போக்குவரத்தின் போது சாரதிகள் வேகக் கட்டுப்பட்டை கடைப்பிடிக்கும்மாறு போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

cfg-e1480344165797 p4-e1480344209947

 

Comments

comments, Login your facebook to comment