முல்லைத்தீவு மாவட்டம் வடக்கில் பெருமளவு நிலப்பரப்பை கொண்டு காணப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு பிரதான நீதிமன்றம் இடப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு A 35 பிரதான வீதியின் அருகே குறித்த நீதிமன்றத்துக்கு கூடிய வசதிகளுடன் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும் அங்கே கட்டுமாணப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்தநிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட பல குற்றப் பொருட்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் A 34 பிரதான வீதியோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக குற்றத்தடயப் பொருட்கள் நீதிமன்ற வளாகத்தை சுற்றிய பகுதிகளில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடயப்பொருட்கள் முல்லைத்தீவு பிரதான பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தை அண்மித்திருப்பதாகவும் பாடசாலை சமூகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment