625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் இந்த வருடத்தில் 1554 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த 22 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தொரிவிக்கையில்,

இதனை தவிர விசாரணைகள் மூலம் 659 முறைப்பாடுகளுக்கு தீர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 17 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் பூர்வாங்க ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மாகம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனிஷ்ட்ட மட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பாக அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment