625.500.560.350.160.300.053.800.900.160.90இப்போதைய அரசியல் சூழலுக்கு அமைய நாளுக்கு நாள் செல்வாக்கு அடைந்து வரும் மஹிந்தவை அடக்க வேண்டிய கட்டாயச் சூழல் மைத்திரி ரணில் தரப்பிற்கு முக்கிய தேவையாக இருக்கின்றது.

காரணம் புதுக்கட்சி செடியாக விதைக்கப்பட்டு தற்போது மரமாக வேரூன்றி வருகின்றது. அரசிற்கு இதனை கட்டுப்படுத்தப்பட வேண்டியது முக்கிய விடயமாக இருந்தாலும் அவற்றையும் தாண்டி பல அவசர வேலைகள் இருக்கத்தான் செய்கின்றது.

இதில் முக்கியமானது இராணுவப்புரட்சி, அடுத்தது யார் ஆண்டால் என்ன அடுத்த ஆட்சி எமக்கு வேண்டும் என்பது போல் வெளிவந்துள்ள இனவாதம்.

இவற்றை முறியடிக்கவே நேரம் சரியாக இருந்த போது மஹிந்த தொடர்பில் தனது பார்வையை நல்லாட்சி சற்றே நகர்த்தி இருந்தது.

ஆரம்பம் முதலாக முன்னாள் அதிபருக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வந்த நல்லாட்சி சற்று இளைப்பாறிக் கொண்ட அந்த இடைவெளியை சாதகமாகப் பயன்படுத்திய மஹிந்த தரப்பு அதி வேகமாக வளரத் தொடங்கியது.

மஹிந்தவின் தோல்விற்கு பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிப்போன பலர் மீண்டும் மஹிந்தவோடு இணைய ஆரம்பித்தனர். மேலும் பலர் மறை முகமாகவும் நேரடியாகவும் உதவி செய்து வர ஆரம்பித்தனர்.

அந்தவகையில் விநாயகமூர்த்தி, மேர்வின் சில்வா போன்றவர்களை குறிப்பிடலாம் ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் மஹிந்தவின் கைக் கூலிகள் எனவும் விமர்சிக்கப்பட்டது.

நல்லாட்சியிடம் பலர் மீதான பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் கைவசம் இருக்கும் போது விநாயகமூர்த்தியை குறிவைத்து கைது செய்ய வேண்டிய அவசியம், அவசரம் ஏன் வந்தது என்பது தொடர்பில் வெளிப்படையில்லை.

அதன் படி பொறுமை காத்து வந்த அரசு இப்போது மீண்டும் தமது ஆட்டத்தினை தொடங்கிவிட்டது, அதன் முதற்படியே கருணாவின் கைது அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை யுத்தத்தில் அதிக பங்களிப்பு கொண்டவர்கள் தற்போது சிக்கலை சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் கருணா, பிரபாகரனை அழித்ததாக கூறிவரும் கமால் குணரத்ன போன்றோர் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டனர்.

போர் தொடர்பிலான முக்கிய புள்ளிகளான முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகா மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய இருவரும் மெளனமாகவே இருக்கின்றனர்.

முக்கியமாக கமால் குணரத்ன போர் தொடர்பில் அடுத்தடுத்து கருத்துகளை வெளிப்படுத்தினாலும் பொன்சேகாவோ ராஜபக்சர்களின் ஊழல்களை வெளிப்படுத்தும் ஒருவராக மட்டுமே இருந்து வருகின்றார்.

இப்போது மஹிந்த தொடர்பில் போர்க் குற்றங்களை வெளிப்படுத்த அரசு தரப்பு தயாராகி வருகின்றார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

காரணம் இது வரையில் விநாயகமூர்த்தியை அரசு சீண்டவில்லை கவனிப்பாரற்ற அரசியல் பிள்ளையாகவே அவர் இருந்து வந்தார் மெதுவாக மீண்டும் அரசியலில் காலடி எடுத்து வைத்த போதும் அரசு சற்று எச்சரிக்கை அடைந்தது.

அவர் மஹிந்தவிடம் கூட்டணி அமைக்கப் போவதாக ஒரு சிலர் விமர்சித்தனர் அப்போதும் பொறுமையாக இருந்த நல்லாட்சி மஹிந்த ராஜபக்ச கட்சி தொடர்பில் வெளிப்படையாக வேலை செய்யத் தொடங்கும் போதே இந்த கைதினை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை நாடு எப்போது வேண்டுமானாலும் சதிகளின் பிடிக்குள் சிக்கி சின்னா பின்னமாகிச் செல்லும் அபாயநிலையே காணப்படுகின்றது.

ஒரு பக்கம் இனவாதம், மறுபக்கம் இராணுவ புரட்சி. இவை அனைத்திற்கும் நல்லாட்சியில் உள்ளவர்கள் விரல் நீட்டுவது மஹிந்த தரப்பினரை என்பதும் அறிந்த விடயமே. இவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் இப்போதைய முக்கிய பொறுப்பு.

ஆட்சிக்கு எதிராக விஸ்வரூபமாக எழுந்து நிற்கும் பிரச்சினைகளை தீர்க்க அல்லது திசைதிருப்பிவிடுவது இப்போதைய சூழலில் முக்கியம். அதனை விடுத்து இனியும் அரசு காலம் தாழ்த்தும் எனில் ஆட்சிக்கு அதோ கதி என்ற நிலவரம் தான்.

இப்போதைய நிலையில் போர் தொடர்பில் முக்கிய ரகசியம் தெரிந்த பொன்சேகாவோ அரசின் பிடிக்குள், அடுத்த படியாக கருணா சேர்க்கப்பட்டு விட்டார் பட்டியலில் கமால் காத்திருக்கின்றார்.

இந்த நிலையில் மஹிந்தவை அடக்க அவர்மீது பிரயோகிக்க முடிந்த ஒரே ஆயுதம் போர்க்குற்றம், இறுதி யுத்தம் என்பது மட்டுமே.

இதனை அரசு வெளிப்படுத்தினால் நாட்டில் இனவாதம், இராணுவப்புரட்சி அனைத்துமே காணாமல் ஆக்கப்பட்டு விடும் என்பதே உண்மை.

இவற்றோடு சேர்ந்து புதுக்கட்சியும் தடம் தெரியாமல் நசுக்கப்பட்டு விடும் அதற்கான திட்டமிடலையே தற்போது அரசு முன்னெடுத்துள்ளது எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

மேஜர் கமால் குணரத்ன கைது செய்யப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகின்றமை இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாகவே அமைகின்றது.

எப்படியாயிலும் அக்காலத்தில் மஹிந்தவின் பின்னணியில் இருந்த முக்கியஸ்தர்களை அகற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட தொடங்கிவிட்டது.

இப்போது ரணில் மைத்திரி போர்குற்றத்தை மெதுவாக மஹிந்த தரப்பினர் மீது சுமத்தி திருப்பி விட்டால் மீண்டும் அவர்கள் எழுவது என்னமோ சாத்தியமற்றது.

சர்வதேசம் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை மீது சாதகமான தன்மையை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. இதனை வலுப்படுத்துகின்றது அமெரிக்காவின் போர்க் குற்றம் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை.

இந்த நிலையில் உள்நாட்டுக்குள்ளேயும் மஹிந்தவின் செல்வாக்கை அழிக்க அரசு தரப்பு ஆயத்தமாகிவிட்டது எனவும் தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக மாற்றங்களும் திருப்பு முனைகளும் ஏற்படுத்தப்பட்டு கொண்டு வரும் நிலையில், அடுத்து மஹிந்த தரப்பின் பதிலடி எப்படி அமையும் அவர் கருணாவை காப்பாற்ற முயற்சிப்பாரா என்பதும் முக்கிய எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

Comments

comments, Login your facebook to comment