625.500.560.350.160.300.053.800.900.160.90 (2)கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கணிதப்பாடத்தில் சித்தி பெறாத மாணவர்களும் இனிவரும் காலங்களில் உயர்தரம் படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

எதிர்வரும் 2018ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கணிதப்பாடம் சித்தி பெறதா மாணவர்களும் இனிவரும் காலங்களில் உயர்தரம் படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

எனவே சாதாரண தரத்தில் இருக்கும் மாணவர்கள் உயர்தரம் படிப்பதற்கான வாய்ப்புக்கள் கிட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment