இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தனிமைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமது பிள்ளைகளையும் இழந்து சொந்த வீடுகளையும் இழந்த பெற்றோர்கள் நிர்கதியான நிலையில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் காலத்தில் யுத்தத்தின் போது மாவீரர்களாக உயிர் நீத்த பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு மாவீரர் குடும்பநலன் காப்பகத்தினால் ஒரு தொகை மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், தற்போது அரசாங்கம் வழங்கும் முதியோருக்கான சிறிய கொடுப்பனவு தவிர வேறு எவ்வித வருமானங்களும் தமக்கு இல்லை என்று சில பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, யுத்தம் காரணமாக இறந்தும், காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (3)

Comments

comments, Login your facebook to comment