625.500.560.350.160.300.053.800.900.160.90 (4)வாகன உரிமையை தமது பெயருக்கு மாற்றிக் கொள்ள வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன் போது வாகன உரிமையை உறுதி செய்து கொள்ளாது வாகனம் வைத்திருப்பவர்கள் சட்ட ரீதியாக உரிமையைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் வழங்கியிருந்த சலுகைக் காலத்தை நீடிக்க இணங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இம்மாதம் 30ஆம் திகதி (நாளையுடன்) இந்த சலுகைக் காலம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாகன உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பதனால் கால அவகாசத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment