சற்றுமுன் கொழும்பு மாநகரசபை வளாகத்திற்கு முன்பாக அகில இலங்கை ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது 

இவ்வார்ப்பாட்டத்தில் அகில இலங்கை ரீதியான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் 30ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர் . மேலும் ஊடகவியலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி,ஊழியர் நம்பிக்கை நிதி(EPF,ETF)களை வழங்க கோரியும் ஊடக அடக்குமுறைகள் இல்லாத சுதந்திரமாக ஊடக பணிகளில் செயற்பட ஊடகவியலாளர்கட்கு சுதந்திரமாக செயற்பட விடுமாறும் கோரி ஆர்ப்பாட்டமானது பேரணியாக சென்று   இறுதியில் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பும் ஊடக மாநாடும் இடம்பெறவுள்ளது.

Comments

comments, Login your facebook to comment