நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினால் மருத்துவ சேவைக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டித்து, வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.

Comments

comments, Login your facebook to comment